×

இன்று எலிமினேட்டர் ஆட்டம்; மதுரை – கோவை மோதல்: நாளை குவாலிபையர் ஆட்டம்

சென்னை: தமிழநாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து  நெல்லை கிங்ஸ்,  சேப்பாக் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஒவ்வொரு அணியும்  தலா 7 லீக் ஆட்டங்களில் விளையாடின. முதல் இடத்தை பிடித்த நெல்லை  6 வெற்றி ஒரு தோல்வியுடன்  12 புள்ளிகளும், 2வது இடத்தை பிடித்த சேப்பாக் 5 வெற்றி  2 தோல்விகளுடன்  10 புள்ளிகளும் பெற்றன. அதேபோல்  மதுரை அணி 2  தோல்வி, 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை வெற்றிருந்தாலும், ரன் ரேட்  அடிப்படையில் 3வது இடத்தையும்,   4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகளை  பெற்று கோவை 4வது இடத்தையும் பிடித்தன.முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் நாளை நடைபெறும் ‘குவாலிபயர்-1’ என்ற முதலாவது தகுதிச் சுற்றில் விளையாட உள்ளன. முன்னதாக இன்று நடைபெறும் ‘எலிமினேட்டர் ’ என்ற வெளியேற்றும் சுற்றில் மதுரை-கோவை அணிகள் களம் காணுகின்றன. ஏறக்குறைய 2 அணிகளும் சமபலத்தில் இருப்பதை போல் தோன்றினாலும் சதுர்வேத் தலைமையிலான மதுரை அணியில் அருண் கார்த்திக், கவுசிக், அனிரூத்,  ரகுபதி சிலம்பரசன், நட்சத்திர ஆட்டக்காரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இருப்பது கூடுதல் பலம்.ஆனால் கோவையையும் குறைத்து மதிப்பிட முடியாது. நடப்புத் தொடரில் யாரிடமும் தோற்காத நெல்லையை கடைசி ஆட்டத்தில் மண்ணை கவ்வ வைத்து பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. கேப்டன் ஷாருக்கான், அதிசயராஜ், சாய் சுதர்சன், சு ரேஷ் குமார், அபரஜித், ஈஸ்வரன் என கவனிக்க வைக்கும் வீரர்களுக்கு பஞ்சமில்லை.  குவாலிபயர்-2வது சுற்றுக்கு முன்னேற   இந்த இரு அணிகளும் முனைப்பு காட்டும்,  இன்றைய   ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது….

The post இன்று எலிமினேட்டர் ஆட்டம்; மதுரை – கோவை மோதல்: நாளை குவாலிபையர் ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : Atom ,Madurai ,Govai ,Chennai ,Tamil ,Nadu Premier League ,DNPL ,T20 cricket series ,Goai ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...